• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருநங்கை கொலை வழக்கில் கைதான பிரியாணி மாஸ்டர் பரபரப்பு வாக்குமூலம்

October 23, 2020 தண்டோரா குழு

கோவையில் திருநங்கை சங்கீதாவை கொலை வழக்கில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சாய்பாபா காலனியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா.இவர் திருநங்கைகள் நல்வாழ்விற்காக தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கினார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சங்கீதா உடலில் வெட்டு காயங்களுடன் தண்ணீர் ட்ரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய சாய்பாபா காலனி போலீசார் அவரது கொலை குறித்து விசாரணையை தொடங்கினர். மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.இந்நிலையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கீதா வீட்டிலேயே தங்கி டிரான்ஸ் கிச்சனில் பிரியாணி மாஸ்டராக வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையில்,
திருநங்கை சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டித்த திருநங்கை சங்கீதா, போலீசில் கூற முயன்றதால் அவரை கழுத்தறுத்து கொன்றதாகவும் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க