• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகளுக்கான விளையாட்டு போட்டி கேரளாவில் நடைபெறவுள்ளது

April 20, 2017 தண்டோரா குழு

நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கான விளையாட்டு போட்டிகள் கேரளாவில்வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது என்று கேரளா விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கேரள மாநிலத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இயக்குனர் சஞ்சையன் குமார் கூறுகையில்,

“நாட்டிலேயே திருநங்கைகளுக்கு என்று முதன் முதலாக கேரளாவில் விளையாட்டு துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் வரும் 28-ம் தேதி திருவனந்தபுரம் சென்ட்ரல் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இதில் 4௦௦ மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தையம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டுகள் இடம்பெறும். கேரளாவிலிருந்து 2௦ திருநங்கைகள் இதில் பங்கேற்கிறார்கள் ” என்றார் அவர்.

திருநங்கை உரிமை ஆர்வலர் ஷீத்தல் கூறுகையில்,

“ திருநங்கைகளுக்கான கொள்கையின் ஒரு பகுதியாக தான் இந்த போட்டி நடைபெறுகிறது. எங்களுடைய சமூக வாழ்வு இந்த கொள்கையால் மாறியுள்ளது. எங்களுடைய இனத்தை குறித்து வெளிப்படையாக பேச நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்த விளையாட்டு போட்டியில் நானும் கலந்துக்கொள்ள போகிறேன். மாவட்ட விளையாட்டு குழு எங்களுக்கு பயிற்சி அளித்து தயார் செய்யும். கேரள அரசு எங்களுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க