• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருடன் என்று நினைத்து மனைவியைச் சுட்டுக் கொன்ற கணவர்

January 23, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் திருடன் என்று தவறாக நினைத்து மனைவியைச் சுட்டுக் கொன்றார் அவரது கணவர்.

இச்சம்பவம் அமெரிக்கா, வட கரோலினா மாகாணத்தில் உள்ள கோல்டிஸ்போரோ நடந்தது. இது குறித்து வட கரோலினா காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 23) கூறியதாவது:

கோல்டிஸ்போரோ நகரைச் சேர்ந்தவர்கள் பில்லி வில்லியம்ஸ் (49) அவருடைய மனைவி ஜினா வில்லியம்ஸ் (48). அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தின்போது ஜினா இரவு பணிக்குச் சென்றுள்ளார். எப்பொழுதும் இரவு பணிக்குச் செல்லும் அவர் மறுநாள் காலையில் 8 மணிக்குத்தான் வீடு திரும்புவார். சம்பவத்தின்போது அவர் வழக்கமான நேரத்துக்கு முன்பே வீடு திரும்பியிருக்கிறார்.

அப்போது, யாரோ முன் கதவைத் திறக்கிறார்கள் என்று அவருடைய குழந்தை கூறியது. அதை அடுத்து, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு முன் கதவைத் திறந்தார். வெளியே வெளிச்சம் இல்லாததால் வந்தது யார் என்று பில்லிக்குத் தெரியவில்லை.

கொலைச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு சென்ற போது ஜினா வில்லியம்ஸ் கழுத்துப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் வீட்டு வாசலில் கீழே விழுந்து கிடந்தார். அவருடைய கணவர் பில்லி அவருக்கு முதல் உதவி செய்து கொண்டிருந்தார். எங்களுடன் வந்திருந்த மருத்துவ உதவியாளர்கள் ஜினாவைப் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

காவல் துறையினர் பில்லி வில்லியம்ஸைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது திட்டமிட்ட கொலை அல்ல. மாறாக ஒரு விபத்துதான் என்பதால் நாங்கள் பில்லிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவில்லை. இது குறித்து விசாரணை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க