• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக ஆட்சியின் கீழ் தொழில் நிறுவனங்கள் மீண்டு எழும் என நம்பிக்கையோடு உள்ளோம் – தொழில்முனைவோர்கள் நம்பிக்கை

May 7, 2021 தண்டோரா குழு

திமுக ஆட்சியின் கீழ் தொழில் நிறுவனங்கள் மீண்டு எழும் என நம்பிக்கையோடு உள்ளோம்
என தொழில்முனைவோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாக்ட் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக பொறுப்பு எற்க இருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான அரசு கொரோனாவில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுக்கும். குறு சிறு தொழில் முனைவோர்களை பாதுகாப்பதுடன் தொழில் சார்ந்து, வியாபாரம் சார்ந்து தொழில் செய்பவர்கள் வருவாய் இழப்பை சரி கட்டவும், அதற்கான நடவடிக்கை தங்கள் அரசு எடுக்கும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கின்றோம்.

குறிப்பாக மத்திய அரசிடம் நீங்கள் வாதாடி தொழில்துறை சார்ந்த கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ரத்து செய்ய செய்வதோடு, ஜப்தி நடவடிக்கைகள் எடுப்பதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் வங்கி கடன்களை தொழில்முனைவோர்கள் திருப்பி செலுத்தவும் அதுபோல வீட்டுக் கடன் டூவீலர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்துவதற்கு ஒரு ஆண்டு காலம் வரை காலஅவகாசம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் விழுந்துகிடக்கும் தனிநபர் வருமானம் இழந்திருக்கும் இந்த தருவாயில் நீங்கள் இது போன்ற நடவடிக்கைகள் மத்திய அரசிடம் இருந்து போராடி பெற்றுத்தர வேண்டும். உங்களது ஆட்சியின் கீழ் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கின்ற நாங்கள் மீண்டு எழுவோம் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க