• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச்செல்வன் ?

June 27, 2019 தண்டோரா குழு

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் நாளை காலை திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தங்க தமிழ்ச் செல்வன் மனதில் பட்டத்தை பட்டென்று பேசும் நபர் என்பது அரசியல் களத்திலிருக்கும் அனைவருக்கும் தெரியும். அரசியல் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பவர். அதிலும் தேர்தலுக்கு முன்பு வரை, அதிமுக அரசை தனது கடும் விமர்சனங்களால் கிழித்து தொங்கவிட்ட தங்க தமிழ்ச் செல்வன், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, ஆழ்ந்த மௌனத்துக்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, விரைவில் அவர் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்,தங்க தமிழ்செல்வன், நாளை காலை திமுகவில் இணைய உள்ளதாகவும் இதனையடுத்து தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள், தேனியில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருப்பதாகவும், நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் தங்க தமிழ்செல்வன் தன்னை இணைத்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்த பின்னர் தேனியில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க