• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினமும் மூன்று மணி நேரமாவது சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி மனு

April 26, 2021 தண்டோரா குழு

தினமும் மூன்று மணி நேரமாவது சலூன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சலூன் தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து இன்று முதல் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.அதன்படி மாநகரம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் சலூன் கடைகள் அடைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

இதனை தொடர்ந்து அச்சங்கத்தின் உக்கடம் கிளைச் செயலாளர் சசிகுமார் செய்தியாளரிடம் கூறுகையில்,

ஏற்கனவே கொரோனா முதல் அலையின் போது சலூன் கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தோம். ஏற்கனவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது மீண்டும் கடைகளை அடைக்க சொல்லி உள்ளனர். பல கடைகள் திறந்து உள்ள போதிலும் சலூன் கடையை மட்டும் மூட சொல்வது நியாயமில்லை.

அரசு கொடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நாங்கள் வேலை செய்துவருகிறோம். எனவே தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மூன்று மணி நேரம் மட்டும் பணி செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க