• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

March 17, 2018 தண்டோரா குழு

டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார், மேலும் அரசியலில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி  தினகரன் தனது அமைப்பிற்கான பெயரையும், கொடியையும் அறிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி பொதுக்கூட்டத்தை புறக்கணித்தார் நாஞ்சில் சம்பத்.  பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்காதது அப்போது பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், நாஞ்சில் சம்பத் இன்று  வெளியிட்ட அறிக்கையில்,

டிடிவி தினகரன் அறிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற  பெயரில் தனக்கு உடன்பாடு இல்லை. அண்ணாவும் , திராவிடமும் இல்லாத  டிடிவி  அணியில் நீடிக்க விரும்பவில்லை.நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க