March 19, 2018
தினகரன் அணிக்கு குக்கர் சின்னம், கட்சி பெயர் ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,மதுசூதனன்,செம்மலை மேல்முறையீடு செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், ள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுசூதனன்,செம்மலை ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.இவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.