• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு

March 14, 2018 தண்டோரா குழு

டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் தரப்பட்டதை எதிர்த்தும் கட்சிக்கு புதிய பெயர் ஒதுக்கீடு செய்வதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், தனது அணிக்கு டிடிவி தினகரன் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,  டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. அதில், தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும் கட்சி பெயரையும் உயர்நீதிமன்றம் ஒதுக்கியது, தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிரானது என முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க