• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினகரனின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது – புகழேந்தி

December 5, 2019 தண்டோரா குழு

ஜெயலலிதா 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை அவினாசி சாலை அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பசுமையான நினைவுகளிலேயே துயரமான நாளாக கருதி அஞ்சலி செலுத்தியுள்ளோம். நீண்ட வரலாறாக வாழ்ந்தவர் ஜெயலலிதா. 2 பேர் தான் இந்தியாவிலேயே அதிகளவில் புத்தகம் படித்ததாக ‘illustrate weekly’ என்ற புத்தகத்தில் சர்தார் வல்லபாய் படேல், மற்றொருவர் ஜெயலலிதா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீரமும், ஆற்றலும் எந்த தலைவரிடத்திலும் பார்க்க முடியாது. ஜெயலலிதா சிறையில் இருந்த போது பிணை கொடுத்தது என் பாக்கியம்.சிலரை சிலரால் தான் கைது செய்ய முடியும், அதை சாதித்தவர் ஜெயலலிதா. சாதாரண மக்கள் கூட முதல்வர் ஆகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி , துணை முதலமைச்சர், வேலுமணி அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. மிக அதிகமாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். பின்னால் செல்ல விரும்பவில்லை, காலத்தின் சூழ்நிலையில் , நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸ், திமுகவிடம் தொகுதி மீட்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் மழை, மேட்டூர் அணை நிரம்பியது என பசுமை தாயகமான அமைதியான இந்த ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.

இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தை திமுக நாடுகிறது , மக்கள் மன்றத்தில் தேர்தலை சந்திக்க திமுக தயாராக இல்லை, ஜெயலலிதா அரசை காப்பாற்றியதால் வேறு வழியில்லாமல் முதல்வரையும், ஆட்சியையும் பாராட்டி வருகிறேன். நாங்கள் உருவாக்கிய தலைவர் வீணாக போய்விடுவார் என்று தெரியாது. இப்போது தான் புரிகிறது. இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும், 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கொள்கை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெற்றிப்பெரும். திரானி இல்லை, தைரியம் இல்லை என என்றெல்லாம் எல்லா இடத்திலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விமர்சித்த ஸ்டாலின், தற்போது தேர்தலுக்கான அறிவிப்பு வந்தபிறகு களத்தை நோக்கி தான் தொலைநோக்கு பார்வை ஸ்டாலினுக்கு இருக்க வேண்டும். மக்கள் கவனித்து வருகிறார்கள் மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்.

இணைவது தொடர்பாக தேதி முதல்வர் சொன்ன பிறகு, இணைப்பு விழா நடத்தப்பட்டு அனைவரும் சென்று சேர்வோம். அன்றைய தினத்துடன் தினகரனின் அரசியல் வாழ்வு முடியும். மிக விரைவில் நடக்கும், இன்று காலை கட்சி பதிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு வந்தது. திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மன்னார் அன் கம்பெனிக்கு ஆதரவு அளிக்க மாட்டார் அங்கு செல்ல மாட்டார் சசிகலா. தினகரன் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது. வெளிவந்த பிறகும் எடப்பாடி பழனிச்சாமி அரசை காப்பாற்றுவதில் முனைப்பாக இருப்பார். காப்பாற்றுவதில் அவரும் ஒருவராக இருப்பார்

மேலும் படிக்க