September 9, 2020
தண்டோரா குழு
நோய்த்தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிசெய்வது குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் புரிதலை கட்டவும், நாட்டின் ஒரு முன்னணி எஃப் எம்சிஜி நேரடி விற்பனை நிறுவனமான ஆம்வே இந்தியா, மீனாக்ஷி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பங்காளராகக் கொண்டு தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிறப்பு சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் ஒழுங்குசெய்தது.
தேசிய ஊட்டச்சத்து வாரத்தை கொண்டாடும் விதமாக இப்பிரச்சாரம் கிராம சமுதாயத்தின் ஊட்டச்சத்து பற்றிய அறிவை மேம்படுத்துவதுடன் குறிப்பாக தற்போது எழுந்துள்ள சுகாதார பராமரிப்பு சிக்கலின் காலகட்டத்தில் அடிப்படை சுகாதார நடவடிக்கைகளில் இந்த முன் முயற்சி கவனம் செலுத்தியது. இந்தநிகழ்வின் போது, ஆம்வே இந்தியா, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, ‘ஆரோக்கியமான உணவுகள் மூலம் கொரோனாவை எவ்வாறு வெற்றி கொள்வது’ என்ற தலைப்பில் ஒருபு த்தகத்தை வெளியிட்டது.
தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், உணவு சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய முக்கிய தகவல்களை கொண்டுள்ளது .அதே நேரத்தில் கோவிட் -19 பற்றிய கட்டுக்கதைகளையும் உடைக்கிறது. புத்தகத்தின் 6,000 இலவச பிரதிகளையும், பெர்சனா ஹேண்ட்வாஷின் 1,000 சாஷேட்டுகளையும் கிராமத்தில் உள்ள ஆம்வேயின் தொலை மருத்து வமையங்கள் மற்றும் மாவட்டத்தில் அமைந்துள்ள பொது சுகாதாரமையங்கள் மூலம் ஆம்வே இந்தியா நன்கொடையா கவழங்கியது. புத்தகத்தை விநியோகிப்பதற்கு முன், அதன் பொருத்தம் குறித்து மாவட்ட நிர்வாகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இந்த புத்தகம் அதன் உள்ளடக்கத்திற்காக, குறிப்பாக நிலக்கோட்டை தாலுகா தலைவர் எ ஸ். ஏ. ரெஜினாநாயகம் மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதியின், தொகுதி மேம்பாட்டு அலுவலர்.செல்வராஜ் ஆகியோர் உட்பட்டோரிடம் இருந்து பொதுவாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
இது குறித்து ஆம்வே இந்தியா உற்பத்திதுணை தலைவர் ராஜீவ் தாஸ் குப்தா கூறுகையில்,
இது திண்டுக்கல்லில் உள்ள ஆம்வே உற்பத்தி நிலையத்தை சுற்றிலும் இருக்கும் மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 26 கிராமங்களில் 350 க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் ,கிராமவாசிகளுக்கு நிலையானசு காதார பராமரிப்பை உறுதி செய்வதற்காக நிறுவனம் மாவட்டத்தில் மூன்று தொலை மருத்துவமையங்களை அமைத்துள்ளது. இந்த திட்டம் தூரம் சம்பந்தப்பட்ட தடைகளை நீக்கி, தொலை தூர கிராமப்புற சமூகங்களில் மருத்துவ சேவைகளுக்கான மேம்பட்ட அணுகலை உருவாக்கியுள்ளது. இந்தமையங்கள் ஒவ்வொருமாதமும் 1,500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கிவருகின்றன என்றார்.