October 13, 2020
தண்டோரா குழு
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட திண்டுக்கல் சிறுமிக்கு நீதி கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம்,குறும்பட்டியை சேர்ந்த சவரத் தொழிலாளியின் 12 வயது மகள் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லபட்டார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யபட்டு விசாரணை நடைபெற்றது.மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் நிரபராதி என கடந்த 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை கண்டித்தும்,பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்
புதுக்கோட்டை ஜெயசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு
கொலை செய்த குற்றவாளியை தப்பிவிடாமல் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தபட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் செயசீலம்,
நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் முறையான அதிகாரியிடம் இந்த விசாரணை ஒப்படைக்க வேண்டும் என்றார்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக மாறி வருவதாக கூறிய அவர் நீதி பிரண்டு சாட்சிகள் இல்லை என்பது மேலும் குற்றங்களை அதிகரிக்க செய்யும் என்றார்.மீண்டும் மறு விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கபட வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.