• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திகார் வரை சென்றவன் யாருக்கும் பயமில்லை – தினகரன்

November 9, 2017 தண்டோரா குழு

திகார் வரை சென்றவன் யாருக்கும் பயமில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடித்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், ஜெயா டிவியில் என் பேட்டியை சோதனை நடைபெறும் போது போடக்கூடாது என வருமான வரித்துறை கூறியது கண்டிக்கத்தக்கது.பச்சை முத்து வீட்டில் ரெய்டு நடக்கும் போது அவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. என் பேட்டியை ஏன்? ஜெயா டிவியில் போடக்கூடாது? தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மத்திய அரசு எங்களை மிரட்டி பார்க்கிறது. என் மாநில செயலாளர் வீட்டில் ரெய்டு. யாருக்கும் பயமில்லை.மன்னார்குடியில் யாரும் இல்லாத வீட்டில் வருமான வரிசோதனை நடைபெறுகிறது.ஜெயா டிவியில் நடக்கும் வருமான வரி சோதனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்.

அடையாறில் உள்ள எனது இல்லத்தில் வருமான வரிசோதனை நடைபெறவில்லை.33 ஆண்டுகளாக சோதனைகளை சந்தித்து வருகிறோம். 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தாலும் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க