• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாலி கட்டும் நேரத்தில் பைக்குடன் மண்டபத்திற்குள் வந்து மணப்பெண்ணை அழைத்து சென்ற காதலன்

April 23, 2018 தண்டோரா குழு

உபியில் சினிமா பாணியில் தாலி கட்டும் கடைசி நேரத்தில் பைக்குடன் வந்த மண்டபத்திற்குள் வந்த இளைஞர் இருவர் மணப்பெண்ணை அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் தான் காதலிக்கு திருமணம் ஆகும் கடைசி நேரத்தில் ஹீரோ மணப்பெண்னை அழைத்து செல்லும் காட்சியை அதிகமாக பார்த்திருப்போம்.அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் மணவறையில் மணமகன் மற்றும் மணப்பெண் அமர்ந்திருந்தனர்.தாலி கட்ட நேரம் ஆனதால் அனைவரும் ஆசிர்வதிக்க எதிர்பார்ப்போடு இருந்தனர்.இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சினிமா பாணியில் ஒருவர் பைக்கில் திருமண மண்டபத்துக்குள் வந்தார்.அனைவரும் அவரை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கையில்,அவர் மணமகளின் கையை பிடித்து பைக்கிலேயே உட்கார வைத்து வேகமாக பைக்கில் தலைமறைவாகி விட்டார். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, விசாரணையில் அவர்கள் இருவரும் காதலித்தது தெரியவந்தது.ஆனால்,பெண் வீட்டார் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணை,வேறு ஒரு ஆணுக்கு மணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.இருப்பினும்,காதலன் சரியான நேரத்திற்கு வந்து மணமகளை அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க