• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய் வர்கத்திற்கு ஒரு சில திருஷ்டிகள்

July 18, 2016 தண்டோராக் குழு

பேய் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்ப்பவள் தாய் என்பது அந்தக் காலம்.

முகநூல் பார்ப்பதைத் துறக்க முடியாமல் தங்கள் குழந்தைகளைத் துறக்க முற்படும் தாய்மார்கள் நிறைந்தது இந்தக்காலம்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த மேரி பெல் என்ற பெண்மணி தனது மூன்று குழந்தைகளை மொஜவெ பாலைவனத்தில் தண்ணீரும்,காலணிகளும்,இன்றி 90டிகிரி தகிக்கும் வெயிலில் தண்டனை அளிக்கும் விதமாக விட்டு விட்டுச் சென்றுள்ளார்.

இவருடன் இவரது தோழர் கர்ய் கச்ஸ்லெம் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.குழந்தைகள் முறையே 7,6,5 வயது பிராயத்தினர்.
இக் குழந்தைகள் ட்வென்ட்டி னைண் என்ற நகரத்திற்குக்கருகில் தகிக்கும் வெயிலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

அதிர்ஷ்ட வசமாக அவ்வழியே சென்ற பாதசாரி குழந்தைகளைக் கண்டு விசாரித்துள்ளார்.அதன்பிறகு குழந்தைகள் சான் பெர்னர்டினொ கௌன்ட்யி குடும்ப குழந்தை நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.குறைந்த நேரத்திலேயே காப்பாற்றப்பட்டு விட்டதால் குழந்தைகள் அதிக துயர் அனுபவிக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.

நல்ல காலத்தின் பயனாக ஒரு நபர் அவ்வழியே சென்றதனால் சிறுவர்கள் கண்டுபிடிக்கப் பட்டனர்.இல்லையென்றால் குழந்தைகளின் கதி அதோகதியாகியிருக்கும் என்றும் இது மிகவும் அபாயகரமான செயலாகும்,கண்டிக்கத்தக்கதுமாகும் என்று அம்மையத்துப் பொதுத் தொடர்பு அதிகாரி சின்டி பச்மன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பெல் மற்றும் கச்ஸ்லெம் இருவரும் மொரொங்கொ பேசின் சிறையில் அடைக்கப்பட்டுப் பின் தலா $100000 ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இக்குழந்தைகள் எதற்காகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் ,சிறுவர்களது தாயும் அவரது தோழரும் வீடேதுமின்றி ஒரு நான்கு சக்கர வாகனத்தில் வசித்து வந்திருக்கின்றனர் என்றும் பச்மன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பெற்றோர் குழந்தைகளைக் கைவிட்டுச் செல்லும் சம்பவங்கள் பல இப்பகுதிகளில் நடந்தேறியுள்ளது.

கடையில் பொருட்கள் வாங்க இடையூறாக இருந்த காரணத்திற்காக க்ருொன்னெக்டிகுட் என்ற இடத்தில் ஏப்ரல் மாதம் ஒரு தாய் தன் குழந்தைகளை விட்டு விட்டு ச் சென்றுவிட்டார்.இதேபோன்று வேறு பல காரணங்களுக்காகவும் டெக்ஸாஸ் ,மேரிலாண்ட் போன்ற பகுதிகளில் தாய் மார்கள் தங்கள் குழந்தைகளைத் துறந்துள்ளனர்

இதைவிடக் கொடுமை என்னவெனில் ஜப்பான் நாட்டில் அடர்ந்த காட்டிற்குள் அநாதையாக விடப்பட்ட 7 வயது க் குழந்தை ஒன்று 7 நாட்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.கார்களின் மேல் கல்லெறிந்ததே இவன் செய்த தவறு.

ஆக ஐந்தறிவுள்ள விலங்கினங்களிடம் காணப்படும் தாய்ப் பாசம் கூட ஆறறிவுள்ள மனிதனிடம் காணப்படாதது அவர்களின் சுயநலத்தையும்,ஈரமற்ற மனதையும் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை..

மேலும் படிக்க