• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய்லாந்தில் இருந்து சிங்க குட்டியுடன் சென்னைக்கு வந்த பயணி !

February 2, 2019 தண்டோரா குழு

தாய்லாந்தில் இருந்து சிங்க குட்டியுடன் சென்னைக்கு வந்த பயணியிடம் இருந்து விமான நிலைய அதிகாரிகள் சிங்க குட்டியை பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளை அவ்வப்போது விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அப்போது ஏராளமான கடத்தல் தங்கக் கட்டிகள் சிக்கும். ஆனால், இன்று ஒரு பயணி சிங்க குட்டியுடன் வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தாய்லாந்தை சேர்ந்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் சிங்கக்குட்டி இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்து சிங்கக்குட்டியை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சிங்கக்குட்டியுடன் தாய்லாந்து பயணியை திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க