• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாமாக பார்க்கிங் செய்து கொள்ளும் நாற்காலிகள்.

April 23, 2016 தண்டோரா குழு

பொதுவாக ஒரு அலுவலகத்தில் கூட்டம் நடப்பது வாடிக்கையான ஒன்று தான்.

ஒரு அறையில் நடைபெறும் கூட்டம் முடிந்த பிறகு, நாற்காலிகளைச் சரியான இடத்தில் வைத்து அறையை ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகள் ஒருவருக்கு அசதியை ஏற்படுத்துகிறது.

ஆனால் கைதட்டுதல் மூலம் நாற்காலியை ஒழுங்குபடுத்தும் புதிய வழியை ஜப்பான்னில் ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இவ்வகை நாற்காலிகள் ஒரு கைதட்டல் மூலம் தங்கள் நிலைக்குத் திரும்பி செல்லும் புதிய திட்டத்தை ஜப்பானில் உள்ள நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தொழில் நுட்பம் அந்த அறையில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் இயங்க வல்லது. கூட்டம் ஆரம்பிக்கும் முன் உள்ள நிலையை ஆராயும் அந்த கேமரா பின்னர் கூட்டம் நடந்து முடிந்தபின் அதே போன்ற வரிசையில் அடுக்க மென்பொருள் ஒன்றை வடிவமைத்து அதை சேரின் சக்கரம் போன்ற அமைப்பில் இணைத்துள்ளனர்.

பின்னர் கூட்டம் முடிந்து செல்லும்போது ஒரு கைதட்டல் தட்டினால் அந்த சேர்கள் அதனுடைய இடத்தில் தானாக சென்று சேர்ந்து விடும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் வைபை மூலம் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இனி நிர்வாகக் கூட்டம் முடிந்து இருக்கைகளை அடுக்கும் வேலை மிச்சம் எனப் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இவை அனைத்துமே மனிதனைச் சோம்பேறியாக்கும் நடவடிக்கையாகத்தான் உள்ளது.

மேலும் படிக்க