• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தானியங்கி கைகழுவ உதவும் அமைப்பு மற்றும் கிருமிநாசினி திரவம் வெளியேற்றும் கருவி

April 30, 2020 தண்டோரா குழு

தானியங்கி கைகழுவ உதவும் அமைப்பு மற்றும் கிருமிநாசினி திரவம் வெளியேற்றும் கருவியை
மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மண்டல மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்க்கொண்டுவரும் இவ்வேளையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனை வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்
தொழிற்சாலைகள்,சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் மக்கள் நுழையும் முன் சோப்புகொண்டு கைகளை கழுவுவது அல்லது கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்திலுள்ள கைகழுவும் தொட்டிகளில் உள்ள குழாயை ஒவ்வொரு நபரும் தொட்டு திருகி தண்ணீரை திறந்தும் சோப்பு கரைசலை கையால் அழுத்தி வெளியேற்றி கையிலிட்டு கைகளை கழுவும் வகையில் உள்ளது. இந்த முறையில் ஒவ்வொருவரும் குழாயை தொடுவதும் வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணியாக அமைந்துவிடும். இதனை கருத்தில் கொண்டு சென்சாரால் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவ உதவும் அமைப்பு மற்றும் கிருமிநாசினிஃசோப்பு கரைசல் திரவம் வெளியேற்றும் கருவியை கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மண்டல மைய விஞ்ஞானிகள் முனைவர்.எஸ்.சையது இம்ரான் மற்றும் முனைவர்.த.செந்தில்குமார் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

தானியங்கி கைகழுவ உதவும் அமைப்பு

இவ்வமைப்பானது தண்ணீர் தொட்டி பேட்டரியால் இயங்கக்கூடிய பம்பு,வேககட்டுப்பாட்டு அமைப்பு, பேட்டரி, சென்சாரால் இயங்கக்கூடிய சோப்பு கரைசல் வெளியேற்றும் கலன் மற்றும் தண்ணீர் குழாய் ஆகிய பாகங்களை கொண்டுள்ளது. இவ்வமைப்பில் பொருத்தப்பட்டுள்ள சோப்பு கரைசல் வெளியேற்றும் கலனுக்கு அருகில் கையை கொண்டுசெல்லும்பொழுது அது அங்கு பொருத்தப்பட்டுள்ள சென்சாரால் உணரப்பட்டு சோப்பு கரைசல் வெளியேற்றும் பம்பு இயக்கம் பெற்று தேவையான அளவு சோப்பு கரைசலை வெளியேற்றும்.பின் கைகளை சோப்பு கரைசலை கொண்டு நன்கு தேய்த்த பின் தண்ணீர் குழாய்க்கு அருகில் கொண்டு செல்லும்பொழுது குழாய் அருகில் பொருத்தப்பட்டுள்ள சென்சாரால் உணரப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பம்பு இயக்கம் பெற்று தண்ணீர் வெளியேறும். கைகளை கழுவிய பின் கைகளை குழாயைவிட்டு வெளியே எடுத்தவுடன் பம்பு இயக்கம்
நிறுத்தப்பட்டு தண்ணீர் நின்றுவிடும்
இதன்மூலம் தண்ணீர் செலவு சிக்கனப்படுத்தப்படுவதுடன் கைகளால் குழாயை தொடமலேயே கைகளை சுத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வமைப்பின் விலை ரூ.10.000 ஆகும்.

தானியங்கி கிருமிநாசினி வெளியேற்றும் கருவி

இக்கருவியானது எளிதில் வெவ்வேறு
இடங்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இக்கருவி கிருமிநாசினி கலன், பேட்டரியால் இயங்கக்கூடிய
பம்பு, கிருமிநாசினி திரவம் வெளியேற்றும் குழாய் மற்றும் சென்சார் ஆகிய பாகங்களை
கொண்டுள்ளது.இக்கருவியின் கிருமிநாசினி திரவம் வெளியேற்றும் குழாய்க்கு அருகில் கைகளை கொண்டு செல்லும்பொழுது
சென்சாரால் உணரப்பட்டு பம்பு இயக்கம் பொற்று கிருமி நாசினி திரவம் வேண்டிய அளவு வெளியேற்றப்படுகிறது. இதனால் கைகளால் தொடாமலேயே கிருமிநாசினி திரவத்தை கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள முடியும்.இக்கருவியின் விலை ரூ.1000 ஆகும்.

மேலும் படிக்க