• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து விடுங்கள் – உச்சநீதிமன்றம்

July 11, 2018 தண்டோரா குழு

தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து விடுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தாஜ்மகாலை பாதுகாக்கக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உத்தரப்பிரதேச அரசு தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த தொலைநோக்கு திட்ட அறிக்கையை ஜூலை 11-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.ஆனால்,தொலைநோக்கு திட்ட அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு சமர்ப்பிக்கவில்லை.இதனால் கோபமடைந்த நீதிபதிகள்,16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

பாரிஸில் டிவி டவரை போன்று இருக்கும் ஈபிள் டவரை விட தாஜ்மஹால் மிக அழகானது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து செல்வதால் உங்களின் வெளிநாட்டு பரிவர்த்தனை பிரச்னையையும் தீர்க்கும்.உங்களின் அலட்சியத்தால் நாடு தனது மதிப்பை இழந்து வருவது உங்களுக்கு புரியவில்லையா?பலமுறை எச்சரித்தும் தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா? காற்று மாசுபாட்டால் தாஜ்மஹால் தனது பொழிவை இழந்து வருவதாகவும்,பழுப்பு நிறத்திற்கு மாறி வருவதாக பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.

தாஜ்மகாலை பாதுகாப்பதில் மத்திய,மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவது இல்லை. தாஜ்மகாலை காக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் அதை மூடிவிடுவோம் அல்லது நீங்களே அதை இடித்துத் தள்ளுங்கள் என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

மேலும்,இந்தியாவின் நினைவுச் சின்னமான தாஜ்மகால் மாசுபட காரணம் என்ன,அதனை தடுப்பது எவ்வாறு என்பதைக் கண்டறிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் இந்த வழக்கை ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள்,அன்றைய தினம் தாஜ் டிரெபீசியம் சோனின் தலைவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க