• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தவறி விழுந்ததால் பார்வை பெற்ற பெண்

May 12, 2016 தண்டோரா குழு

கண் பார்வை என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதை இழந்தவர்கள் கடினமான பாதையில் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சிலர் அறுவை சிகிச்சை செய்து இழந்த பார்வையை பெற்றுக் கொள்கின்றனர்.

அவ்வாறு செய்ய இயலாதவர்கள் பார்வை இல்லாமல் வாழப் பழகிக்கொள்கிறார்கள். அப்படி வாழ்ந்த ஒருவருக்கு, 21 வருடங்களுக்குப் பிறகு இழந்த கண் பார்வை, கீழே தவறி விழுந்ததினால் மீண்டும் கிடைத்தால் எப்படி இருக்கும்.

மேரி பிரான்கோ (70), 1995 ஆம் ஆண்டில் நடந்த ஒரு கார் விபத்தில் முதுகு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருடைய கண் பார்வையை இவர் இழக்க நேரிட்டது. இருபது ஆண்டுகளாக வீட்டில் முடங்கிக் கிடந்த அவர் தெற்கு ப்ளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் நடக்க முற்பட்ட பொது தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவருடைய கை மற்றும் முதுகின் வழியைக் குறைக்க அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அதிருஷ்ட வசமாக அவருக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த நரம்பியல் நிபுணர், டாக்டர் ஜான் அப்சர், மேரிக்கு நடந்த கார் விபத்தில் அவருடைய முதுகு எலும்பிற்கு இரத்தம் கொண்டு செல்லும் குழாயின் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அதனால் அவர் கண்பார்வையை இழந்து இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.

பின்னர் சமீபத்தில் அவருக்குச் முதுகுத்தண்டு பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் பயனாக அவருக்கு மீண்டும் கண்பார்வை வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும், இதுவரை இது போன்ற ஒரு சம்பவத்தை மருத்துவ வரலாற்றில் பார்த்ததே இல்லை எனத் தெரிவித்தார். மேலும் இழந்த கண்பார்வையை மட்டும் அவர் திரும்ப வரவில்லை, மாறாக நிறக் குருடாகவும் இருந்த அவருடைய குறை முற்றிலும் குணமாகிவிட்டது என்றும் அவர் ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.

தனக்குக் கிடைத்து உள்ள இந்த புதிய கண்பார்வை ஒரு அற்புதம் என்றும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய உறவினர்களைக் காண்பது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது எனவும் மேரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க