• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தவறான செய்கையால் வந்த வினை.

May 5, 2016 தண்டோரா குழு

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தவறான நடத்தையின் காரணமாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டாக்டர் ஜகதீஷ் சோனகர், மருத்துவ பட்டம் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. உத்தரபிரதேஷ் மாநிலத்தில் பல்ராம்பூர் என்னும் இடத்தில் தனது வழக்கமான ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்குச் சென்ற போது போதிய ஊட்டச் சத்து இல்லாமல் வளரும் குழந்தைகள் பிரிவுக்குச் சென்றார்.

அந்த பிரிவைப் பார்வையிட்ட பிறகு அந்தக் குழந்தைகளின் தாய்மார்களுடன் கலந்துரையாடிக் கொண்டு இருந்த அவர், காலணியுடன் அவருடைய இடது காலை குழந்தையுடன் அமர்ந்திருக்கும் தாயின் படுக்கையின் மேல் வைத்தவாறு பேசிக்கொண்டு இருந்தார்.

இதைக் கவனித்த மற்ற நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் கோபம் கொண்டனர். அவருடைய இந்தத் தவறான நடவடிக்கை கண்ட ஒருவர் அதைப் புகைப்படம் எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவு செய்துவிட்டார். பதிவு செய்த சில மணி நேரத்தில் இந்தப் புகைப்படம் வைரலாக பரவியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஐ.எ.எஸ் அதிகாரி, தான் நல்ல எண்ணத்துடன் மருத்தவமனைக்கு சென்று நோயாளிகளைச் சந்தித்து பேசியதாகவும், ஆனால் தன்னுடைய நடவடிக்க எதிர்பாராத விதமாய் நடந்து என்றும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து இணையத் தலத்தில் பலர் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதன் பின்னும் அவர் தன்னுடைய தவற்றுக்காக மன்னிப்பு கேட்க வில்லை.

மருத்துவ பட்டம் பெற்ற சத்தீஸ்கர் ஐ.ஏ.எஸ். அதிகரி ஜகதீஷ் சோனகரை சந்தியுங்கள். இந்த நாட்டில் அவருடைய இடம் என்னவென்று அவருக்குத் தெரியும் என்று காஞ்சன் குப்தா என்பவர் டிவிட்டரில் தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை குறித்து முதலமைச்சர் ராமன் சிங் அவர்களுக்குத் தெரிய வந்த போது, தலைமை செயலாளர் அவர்களிடம் அந்த அதிகாரிக்கு மரியாதைகளைக் கற்றுத்தர தான் அறிவுறுத்தப் போவதாக தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசுகையில், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நன்னடத்தையை கற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் அதைச் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க