• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைமைச் செயலகத்தில் யாகம் – ஓபிஎஸ், கிரிஜா வைத்தியநாதன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு

January 25, 2019 தண்டோரா குழு

யாகம் நடத்தியதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதில் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர் என்று கூறப்பட்டது. இந்த விவகாரம் பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது. இதையடுத்து, இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒ.பி.எஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு தலைமை வழக்கறிஞரிடம் முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீதும் வழக்குதொடர அனுமதிதர வலியுறுத்தி உள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் அரசு அலுவலகங்களில் மதச்சடங்கு நடத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் பொது இடங்களில் கோவில் கட்டியதையொட்டி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இம்மனு விரைவில் விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க