• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

February 4, 2021 தண்டோரா குழு

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பிகே புதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி வயது (40) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ரங்கசாமி என்பவர் நிரந்தர துப்புரவு பணியாளராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சீத்தாலட்சுமி என்ற மகப்பேறு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று தன்னுடைய வீட்டிற்கு வந்த அவர் வீடியோ மூலம் வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணியை பார்த்து வந்தவர் மற்றும் அங்கு பணிபுரியும் செவிலியர் ஆகிய இருவர் தனியாக ஒரு அறையில் இருப்பதை பார்த்ததாகவும் ,இதனை பழி வாங்கும் நோக்கில் செய்யாத தவரை செய்ததாக மேலிடத்தில் புகார் செய்து அவமானப்படுத்தியதாகவும், மேலும் தனது வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் ,தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரங்கசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.தற்போது இந்த தற்கொலை வீட்டியோவானது வைரலாகி வருகிறது.

இதுவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் அரசு மருத்துவ பிரேத கிடங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கு வந்த போலீசார்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க