• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி – ஓ. பன்னீர்செல்வம்

April 19, 2017 தண்டோரா குழு

அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தை நீக்கி வைத்திருப்பது தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம் கூறியதாவது:

அதிமுகவை மக்கள் இயக்கமாக உருவாக்கினார் எம்ஜிஆர்,அதன் பின்பு, ஜெயலலிதாவால் பல ஆண்டுகாலம் நடத்தப்பட்டு வந்த இந்த இயக்கம், அவரது மறைவுக்கு பின்னர், சசிகலாவின் குடும்பத்துக்குள் சென்று விட்டதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த தர்ம யுத்தம் துவக்கப்பட்டது.

அதன் முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பது என அவர்கள் தரப்பில் முடிவு எடுத்துள்ளார்கள். மக்களின் எண்ணப்படியும், தொண்டர்களின் விருப்பப்படியும், எங்களது தர்மயுத்தம் தொடரும்.

மேலும் அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு தரப்பும் பேசி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க