• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தரணி எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்து – ராமதாஸ்

April 13, 2019 தண்டோரா குழு

தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தாரைவார்க்கப்பட்ட காவிரி உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேறவும், வளமான, மகிழ்ச்சியான தமிழகம் என்ற கனவு நனவாகவும் அற்புதமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். அதற்கு சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும்; உணவு படைக்கும் கடவுளரான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்; அதற்காக சரியான முடிவை எடுக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது. மத்திய அரசின் கேடுகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் வலிமையைப் பெற்றுள்ள தமிழகம், நடைபெற இருக்கின்ற 17-வது பாராளுமன்றத் தேர்தல் களத்தில் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில் நல்ல தீர்ப்பு அளிக்கும். தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவு ஊட்டிடக் கடமை ஆற்றுவோம்; களத்தில் வெற்றியும் காண்போம். தரணி எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க