• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விஷாலுக்குக் கமல் ஆதரவு

February 3, 2017 தண்டோரா குழு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் விஷாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ளது. அதில், தலைவர் பதவிக்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் போட்டியுள்ளார். நடிகர் விஷாலை முன்மொழிந்து உலகநாயகன் கமல்ஹாசன் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

இது தொடர்பாக விஷால் தாக்கல் செய்துள்ள வேட்புமனு படிவத்தில் கையெழுத்திட்டுள்ள நடிகர்-தயாரிப்பாளர் கமல்ஹாசன், “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினரும், வரும் தேர்தலில் வாக்களிக்க உரிமையுடையவருமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநரான நான் 2017-18 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்குத் தயாரிப்பாளர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ள விஷால் கிருஷ்ணாவை முன் மொழிகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து நடிகர் விஷால் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளைப் பெற்றார்.

மேலும் படிக்க