• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது பேட்ட – படக்குழுவினர் அதிர்ச்சி

January 10, 2019 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் திரையரங்கில் வெளியான சிலமணி நேரங்களில் தமிழ்ராக்கர்ஸ் இளையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

2.0.படத்திற்கு பிறகு ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில்ஹாஸ்டல் வார்டனாக நடிகர் ரஜினிகாந்த் கலக்கியுள்ளார். இதற்கிடையில், திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைபடங்களை வெளியான அன்றே திருட்டுதனமாக இணையதளத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தமிழ் திரையுலகிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. எனினும், இந்தப் படங்கள் இணையதளங்களில் வெளியாகாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பேட்ட திரைப்படத்தை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், பேட்ட திரைப்படத்தை அடுத்த சில மணி நேரங்களில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு விட்டது. மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்ட பேட்ட திரைபடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இதனால், பேட்ட படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பேட்ட திரைப்படத்தை இணையதளங்களில் காணாமல், தியேட்டருக்கு
காணவேண்டும் என படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க