• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் மொழி தனக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது – பிரதமர் மோடி

February 16, 2018 தண்டோரா குழு

சமஸ்கிருதத்தை விட அழகான தமிழ் மொழி தனக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தேர்வுகள் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், 

மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன், மன அழுத்தத்தை வென்று தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை அவசியம் என வலியுறுத்தி பேசினார். மேலும், உங்களில் சில மாணவர்களுடன் உங்கள் தாய் மொழியில் உரையாட முடியாததற்கு வருந்துகிறேன்.தமிழ்தான் மிகவும் பழமையான மொழி. சமஸ்கிருதத்தைவிடவும் தமிழ் பழமையான மொழி. அழகானதும் கூட. ஆனால் என்னால் வணக்கம் என்ற ஒரு தமிழ் வார்த்தையை மட்டுமே பேச முடிகிறது.

தமிழ் கற்க முடியாததற்கு நான் வருத்தப்படுகிறேன் என்றார்.  மேலும், தன்னம்பிக்கை இல்லாவிட்டால் கடவுளின் துணையிருந்தாலும் வெற்றி பெற முடியாது என விவேகானந்தரின் பொன் மொழிகளை மேற்கொள் காட்டிய மோடி, மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள அதிகம் சிந்திக்க வேண்டும் என்றார்.

 

மேலும் படிக்க