தமிழ் மொழிக்காக கருணாநிதி ஆற்றிய தொண்டு மகத்தானது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் கூறியுள்ளார்
தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பின்னர் கருணாநிதியின் இரங்கல் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பேசுகையில்,
“இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. 13 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றியவர், 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் ஆனார். எழுத்து, இலக்கியம், திரைத்துறை என அனைத்திலும் சிறந்து விளங்கியவர், பன்முக தன்மை கொண்டவர்.ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரிய கருணாநிதி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை அளித்தவர்.தமிழ் மொழிக்காக கருணாநிதி ஆற்றிய தொண்டு மகத்தானது. கருணாநிதியின் பன்முகத்தன்மையால் சமூக விழிப்புணர்வை தன்னுடைய எழுத்தின் மூலமாக ஏற்படுத்தியவர். பராசக்தி படம் மூலம் தன்னை பகுத்தறிவாளர் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்த கருணாநிதியை அதிமுகவும் சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது, தேவையெனில் எதிர்த்து உள்ளது. தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வென்றவர். அவருடைய மறைவிற்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மேலும், கருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று கலைஞர் மு.கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் புகழாரம் சூட்டினார்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்