• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் நடிகை வனிதா விஜயகுமார் மீது கடத்தல் வழக்கு பதிவு

May 18, 2017 தண்டோரா குழு

தமிழ் திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் மீது குழந்தைக் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவிற்கும் ஆனந்த்ராஜீற்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்கிடையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2012-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டனர். அப்போது குழந்தை ஜெய்நிதா, ஆனந்த் ராஜ் வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, வனிதா அவ்வப்போது குழந்தையைப் பார்த்துச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஜெய்நிதாவை ஆனந்த ராஜின் அனுமதி பெற்று அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குறித்த காலத்திற்குள் மீண்டும் கொண்டு வந்து சேர்க்காததாலும், தொலைபேசியில் அழைத்தாலும் பதிலலிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, தனது குழந்தையை கடத்திச் சென்றதாக ஆனந்த் ராஜ் அளித்த புகாரின் பேரில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆல்வால் காவல்துறையினர் வனிதா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க