• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் ‘அமேசான் உள்ளூர் கடைகள்’ திட்டத்தில் இணைந்த 41 ஆயிரம் சில்லறை விற்பனை மற்றும் அக்கம்பக்கம் கடைகள்

February 24, 2024 தண்டோரா குழு

அமேசான் நிறுவனத்தின் ‘அமேசான் உள்ளூர் கடைகள்’ திட்டத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 41 ஆயிரம் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அக்கம் பக்கம் கடைகள் இணைந்து தங்கள் வர்த்தகத்தில் வளர்ச்சி கண்டுள்ளன.

விவியன் ஜூலியஸ் என்பவர் கோவை காந்திபுரத்தில் எலிக்சிர் கம்ப்யூட்டர்ஸ் என்னும் பெயரில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் உதிரி பாகங்கள் கடையை நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 2022-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிலையில் விவியன் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்தார்.அப்போது அவர் தனது விருப்பமான இணையதளமாக அமேசான்.இன் தளத்தில் இணைந்தார்.

‘அமேசான் உள்ளூர் கடைகள்’ திட்டத்தில் இணைந்த ஒரு மாதத்தில் அவருக்கு 25க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைத்து அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியோடு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.மேலும் ஆர்டர் பெற்ற அன்றைய தினமே வாடிக்கையாளர்களுக்கு அந்தப் பொருட்களை டெலிவரி செய்து அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்தார். இந்த திட்டத்தில் சேர்ந்து வணிகக் கணக்கை துவங்குதல், தன்னிடம் உள்ள பொருட்களை பட்டியலிடுதல் மற்றும் கையாளுதல் தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் அமேசான் அவருக்கு அளித்தது.

இது குறித்து அவர் கூறுகையில்,

உள்ளூர் கடைகள் விற்பனை திட்டத்தில் சேர்ந்த முதல் மாதமே எனக்கு ஏராளமான ஆர்டர்கள் கிடைத்தன.எனது ஒட்டுமொத்த வணிகத்தையும் மேம்படுத்தி, ஆப்லைன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்குவதோடு ஆன்லைனிலும் அமேசான் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார். இன்று, விவியன் தமிழ்நாட்டில் உள்ள 41 ஆயிரம் சில்லறை ஆப்லைன் விற்பனையாளர்கள் மற்றும் அக்கம்பக்க கடைகளுடன் தானும் ஒருவராக ‘அமேசானில் உள்ளூர் கடைகள்’ திட்டத்தில் இணைந்துள்ளார்.

இந்த திட்டம் ஆன்லைன் வர்த்தகத்தின் பல்வேறு பலன்களை ஆப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அக்கம்பக்க கடைகளுக்கு வழங்குகிறது.இந்த திட்டமானது அவர்களின் ஆப்லைன் வர்த்தகத்துடன் அவர்களை ஆன்லைன் வர்த்தகத்திலும் நுழைய உதவியாக உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் நகரத்தில் உள்ள அக்கம்பக்கக் கடைகளில் இருக்கும் பொருட்களைக் கண்டறிய இந்தத் திட்டம் உதவுவதோடு, உள்ளூர் கடைகளை டிஜிட்டல் ஸ்டோர்களாக மாற்றவும் உதவுகிறது.

இந்த திட்டத்தின் மூலம், விற்பனையாளர்கள் தங்களின் தற்போதைய டெலிவரி வழிமுறைகளைப் பயன்படுத்தியோ அல்லது கூரியர் நிறுவனங்களுடன் இணைந்து தங்கள் ஆர்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யலாம். மேலும் இந்தியா முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் பிற இடங்களில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த, ‘ஈஸி ஷிப்’ மற்றும் ‘செல்லர் ப்ளெக்ஸ்’ போன்ற அமேசானின் பிற திட்டங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமேசானில் உள்ளூர் கடைகள்’ திட்டப் பிரிவு தலைவர் அபிஷேக் ஜெயின் கூறுகையில்,

நாடு முழுவதும் எங்களின் ‘அமேசானில் உள்ளூர் கடைகள்’ திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை பார்க்கையில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 41 ஆயிரம் உள்ளூர் ஆப்லைன் கடைகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. இந்த கடைகள் தங்களை அமேசான்.இன் இணையதளத்தில் விற்பனையாளர்களாக பதிவு செய்து ஆன்லைன் சந்தையில் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நல்ல பலன் அடைந்து வருகின்றன.

இங்கு இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஏராளமான ஆப்லைன் சில்லறை விற்பனையாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற சிறு வணிகங்கள் ஆன்லைனில் வந்து டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதை பார்க்கையில் டிஜிட்டல் வர்த்தகம் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. இந்த திட்டத்தின் மூலம், அதிகமான ஆப்லைன் சில்லறை விற்பனையாளர்களை ஆன்லைனில் கொண்டு வந்து, அவர்களின் பொருட்களை அருகில் உள்ள ஏராளமான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்று அவர்களின் வணிக வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

ஆப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அக்கம்பக்க கடைகள் டிஜிட்டல் தொழில்முனைவோராக மாற தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்கின்றன.

மேலும் படிக்க