• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக முனைவோருக்கான பயிற்சி விண்ணப்பக்காலம் நீட்டிப்பு

June 2, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் RKVY- RAFTAAR -R-ABI எனும் தொழில்நுட்ப வேளாண் பயிற்சிக்கு 04.05.2020 அன்று விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

வேளாண் சார்ந்த துறைகளில் புதிய தொழில்நுட்பம், யோசனை மற்றும் தொழில் முனைவோராக எண்ணம் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் வேளாண் வணிகத்தை தொடங்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் உயர்மட்டகுழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதம் பயிற்சி மற்றும் மாதத்திற்கு ரூ.10,000 மானியமாக இரண்டு மாதங்கள் பெறுவர்.

பயிற்சி நிறைவடைந்த பின் பயிற்சி பெற்றோர் தங்களது வணிக திட்டங்களை பற்றிய விளக்கத்தை MANAGE, ஹைதராபாத் மண்டல குழுவின் முன் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மானியம் பெற பரிந்துரைக்கப்படும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசிநாள் 31.05.2020 ஆக அறிவித்திருந்த நிலையில் 15.06.2020 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கணும் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

https://sites.google.com/a/tnau.ac.in/tbi
https://tbitnau.com
http://www.tnau.ac.in

மேலும் படிக்க