• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழா-2020

May 19, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவிற்கு மாணவ மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் “41-வது வருடாந்திரப் பட்டமளிப்பு விழாவிற்கு” இப்பல்கலைக்கழகத்தால் 31.03.2020 அன்று வரையிலான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ மாணவியர்களிடமிருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விவரங்களைத் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tnau.ac.in
மூலம் 20.05.2020 முதல் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.tnau.ac.in இணையதளத்தில் உள்ள இணைப்பு (link) மூலம் ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணத்தை SBI collect ( the comptroller TNAU coimbatore ) மூலம் கணக்கில் செலுத்த வேண்டும். இப்பட்டமளிப்பு விழாவிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் அதாவது தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழின் (PC) நகல் / இறுதி பருவ மதிப்பெண் சான்றிதழின் நகல் (ஒன்று மட்டும்) இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான இரசீது மற்றும் சமீபத்தில் எடுத்த புகைப்படம் (2nos) இப்பல்கலைக்கழகத்திற்கு 06.07.2020-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் இது சம்பந்தமான விவரங்கள் அறிய விரும்புவோர்0422-6611506 என்ற தொலைபெசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க