• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

December 14, 2021 தண்டோரா குழு

கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விதைச்சான்று வழங்கும் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றினால் கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும், சென்னைக்கு விதைச்சான்று துறையின் தலைமை இடத்தை மாற்றுவதால் விவசாயிகள் அதன் மூலம் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களை நேரிடக் கூடும் என்பதாலும் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி,

கோவையில் விவசாயம் மற்றும் விதைகளை பயன்படுத்துவோர் அதிகம் இருக்கும் நிலையில் அரசு எடுத்துள்ள இம்முடிவு கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் இத் துறையின் தலைமை இடத்தை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க