• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் நடத்தும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவக்கம்

February 14, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் நடத்தும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் சார்பில் 16வது மாநில பாரா ஒலிம்பிக் தடகள மற்றும் 6வது இளையோர் நீச்சல் போட்டிகள் இன்று கோவையில் துவங்கியது.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் இப்போட்டியின் துவக்கமாக 80க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர். இதனை விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவையில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 1200க்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். தடகள போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நீச்சல் போட்டிகள் மாநகராட்சி நீச்சல் குளங்களிலும் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறுவோர் சென்னையில் நடக்க உள்ள தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெறும்.

மேலும் படிக்க