• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி !

January 14, 2019 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறி உள்ளார்.

தை திருநாளான பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறி உள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களுக்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.

மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,

“பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க