November 7, 2017
தண்டோரா குழு
தமிழறிஞர் மா.நன்னன் உடல்நலக்குறைவால் சென்னை சைதாப்பேட்டை உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.
1924ல் ஜூலை 30ம் தேதி கடலூர் மாவட்டம் சத்துக்குடலில் பிறந்தவர் மா.நன்னனின் இயற்பெயர் திருஞானசம்பந்தன்.திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவராக இருந்தார் தமிழறிஞர் மா.நன்னன்.
மேலும்,வெள்ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்ற இவர் தமிழ் கட்டுரை, பாட நூல்கள் உள்ளிட்ட சுமார் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக பணியாற்றிய இவர்,எழுத்தறிவித்தலில் நன்னன் முறை என்ற புதிய முறையை உருவாக்கினர்.
மாநில கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய நன்னன் தமிழ்ச் செம்மல் விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
பெரியார் கொள்கைகளின் மீது பற்றுக் கொண்ட இவர் பெரியார் கொள்கைகள் குறித்து பல நுல்களை எழுதியுள்ளார்.இவர் எழுதிய “பெரியாரைக் கேளுங்கள்” என்னும் நூல் தமிழ் வளர்ச்சித்துறையின் 2009ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.
மா.நன்னன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.