• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வர் காரில் இருந்த சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட்டது

April 20, 2017 தண்டோரா குழு

மத்திய அமைச்சரவை முடிவினைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் இருந்த சுழலும் சிவப்பு விளக்குகளை அகற்றினார்.

ஆபத்து காலத்தில் அவசர சேவைக்காக செல்லும் வாகனங்களை தவிர ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள் மற்றும் வி.ஐ.பி.களின் வாகனங்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய 3 பேருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது காரில் இருந்த சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க