• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.நியமனம் !

October 8, 2021 தண்டோரா குழு

தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை கூடுதல் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு ஆட்சியில் உளவுத்துறையின் பங்கு என்பது மிகப்பெரியதாகும். இதனால் ஆட்சியாளர்கள் தங்களது வசதிக்கேற்ப உளவுத்துறையில் டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி, ஐஜி, எஸ்.எஸ்.பி ஆகிய பதவிகளில் நம்பிக்கையானவர்களை நியமிப்பார்கள்.

தற்போது தமிழகத்தில் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள், எஸ்.எஸ்.பி.யாக அரவிந்தன் ஆகியோர் உள்ளனர். ஐ.ஜி பதவி காலியாகவே உள்ளது.

உளவுத்துறையில் உயர் அதிகாரிகள் பலர் இருந்தாலும் எஸ்எஸ்பி என்றழைக்கப்படும் எஸ்.பி பதவிக்குதான் பவர் அதிகமாக இருக்கும். காரணம் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் உள்ள அத்தனை நிகழ்வுகளும், தகவல்களும் கீழ்மட்ட அதிகாரிகள் மூலம் இவரிடம்தான் போய்ச்சேரும். இவர்தான் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு அண்ட் தகவல்களை அளிப்பார்.

தற்போது இப்பதவியில் அரவிந்தன் உள்ளார். இந்த நிலையில் தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உளவுத்துறை கூடுதல் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்.எஸ்.பி பணியிடத்தை அரசு உருவாக்கி இருப்பது தமிழக போலீஸ் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க