• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கோவையில் ஆய்வு

June 16, 2022 தண்டோரா குழு

தமிழக சட்டமன்ற பேரவையின் 2021-2023ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவின் தலைவர் கோவி. செழியன், (அரசு தலைமைக் கொறடா) மற்றும் உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில் குமார், பிரபாகரராஜா, மதியழகன் மாங்குடி ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் கோவை அவினாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப்பணி பார்வையிட்டனர். பின்னர்
டைட்டில் பார்க் அருகில் பி.டி. சாலை அமைக்கும் பணிகள்,சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹச்.எஸ். காலனியில் ரோப் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து வெள்ளலூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், 63வது வார்டு ராமலிங்க ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிலையில் இக்குழு கோவை வருதையொட்டி கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள் குறித்த மனுக்களை தலைவர், மனுக்கள் குழு தமிழக சட்டமன்ற பேரவை, சென்னை 600009 என்ற முகவரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமலிருக்கும் பொது பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். அதே போல் தனிநபர் குறை, நீதிமன்ற வழக்கு, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற மனுக்கள் இருக்கக்கூடாது எனவுன் அறிவுத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை,மனுக்கள் குழு ஆய்வுக்கு எடுத்து கொண்டது.இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவானது நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க