• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

February 26, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தேர்தலை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் நடத்த வேண்டும்.தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி.வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக உள்ளனர்.தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர், குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி துறைமுகம்.தமிழகத்தின் 234 தொகுதிகளில் 44 தனித் தொகுதிகள்; 2 பழங்குடியினர் தொகுதிகள். 5 மாநிலங்களிலும் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்; 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வீடு வீடாகச் சென்று அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வாக்கு கேட்கலாம்.ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி.

80 வயதிற்கு மேல் ஆனவர்கள் தபால் வாக்குகள் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் வாக்குகளை செலுத்தலாம்.குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதுபற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும். விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் தொடக்கம் –  10.03.21

வேட்புமனு தாக்கல் நிறைவு – 19.03.21

வேட்புமனு  பரிசீலனை – 20.03.21

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் – 22.03. 21 

தேர்தல் நாள் : 06.04.21

வாக்கு எண்ணிக்கை : 02.05.21

மேலும் படிக்க