• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக – கேரள எல்லையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு காட்டு யானைகளை சுட்டு கொன்ற இருவர் கைது

February 27, 2019 தண்டோரா குழு

தமிழக – கேரள எல்லையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு காட்டு யானைகளை சுட்டு கொன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தமிழக – கேரள எல்லையான பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மணலியம்பாடம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு காட்டு யானைகள் இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு அப்பகுதி கிராம மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜபீர், மற்றும் பிஜூ என்ற இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் பணத்திற்காக யானைகளை சுட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க