• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக கேரளா எல்லையில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

February 3, 2020

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியடுத்து தமிழக கேரள எல்லையில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் அதன் அறிகுறி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மருத்துவவர் ஜெகதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், கேரளாவில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள், கார் உள்ளிட்ட வாகனங்ளை நிறுத்தி அதில் பயணிப்பவர்களுக்கு மருத்துவகுழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் குறித்த அச்சம், பீதி பொதுமக்களுக்கு இருக்கும் வரை தினமும் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்த பொது சுகாதார துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
பேருந்துகளில் ஏறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மருத்துவ குழுவினர் தினமும் 10 முதல் 15 முறை கைகளை கழுவினாலே இந்த வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். தமிழக கேரள எல்லைப் பகுதியில் சில நாட்களுக்கு இந்த முகாம்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க