• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக என்.சி.சி மாணவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

February 5, 2019 தண்டோரா குழு

குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய தமிழக என் சி சி மாணவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு கலாச்சார மற்றும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து 16 இயக்குனரகங்களை சேர்ந்த தேசிய மாணவர் படையினர் போட்டியிட்டனர். இதில் தமிழகம், புதுவை, மற்றும் அந்தமான் நிகோபார் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர்.

மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் தமிழக அணி அதிக பதக்கங்களை பெற்றது. இந்த முகாமில் பங்கேற்று கோவை திரும்பிய தேசிய மாணவர் படையினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை ரயில் நிலையத்தில் என் சி சி மாணவர்கள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அனைத்து பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் என் சி சி குழுவினரை உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் படிக்க