• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

December 1, 2018 தண்டோரா குழு

தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோலிவுட்டில் எந்த புதிய படம் இறங்கினாலும் சொல்லி வைத்து முதல் நாளிலேயே திருட்டுதனமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தையும் நீதிமன்ற உத்திரவையும் மீறி அந்த இணையதளம் வெளியிட்டது.

இது தமிழ் திரையுலகில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ ,

தமிழ் ராக்கர்சை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றோர் இணைந்து வந்தால் மட்டுமே ஒழிக்க முடியும்.திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க தனி சட்டம் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க