• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் வந்தார் பொறுப்பு ஆளுநர் முக்கிய அறிவிப்பு வெளிவருமா?

April 17, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கிடையே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழத்தில் பல்வேறு அரசியல் சூழல் நிலவி வருகிறது. அதிமுக கட்சி சசிகலா அணி ஓபிஎஸ் அணி இரண்டாக பிரிந்தது. பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடந்த 7ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வருமான வருமான வரித்துறையினர் ரூ.89 கோடி பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், இன்று அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தில்லியில் விசாரணை நடத்துகிறது. அதேசமயம், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வாங்கியதாக தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொள்ள தில்லி குற்றப்பிரிவு போலீசார் நாளை சென்னை வரவுள்ளனர். மேலும், வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மீண்டும் ஆஜராகவுள்ளார். அப்போது ஏதேனும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைபோல், அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக அணுகினால் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் . இதனிடையே, முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,மற்றும் மற்றும் மூத்த அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க