October 30, 2017
தண்டோராகுழு
தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்லில் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிக்கனலில் விளம்பர பலகைகள் இருப்பதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி அதிக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பேனர் வைக்க தடை விதிக்கவேண்டும் என கோவை நுகர்வோர் மையம் சார்பில் கதிர்மதியோன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு தமிழகம் முழுவதும் சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.