• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு

April 16, 2019 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 845 வேட்பாளர்களும், சட்டசபை இடைத்தேர்தலில் 242 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம், 269 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். இதனையொட்டி, கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இதேபோன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோரும் தமிழகத்திற்கு வருகைதந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் ஒய்ந்தது. இதனை முன்னிட்டு கடைசி கட்டத்தில் தலைவர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க