• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

June 8, 2017 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் காற்றுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க