• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் பெரியாழ்வார் மண் என்ற தமிழிசையின் கருத்து வரவேற்கத்தக்கது – ஹெச்.ராஜா

February 14, 2018 தண்டோரா குழு

தமிழகம் பெரியாழ்வார் மண் என்ற தமிழிசையின் கருத்து வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,

இந்து கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்.கோவில் சொத்துகள் குறித்த தகவல்களை போர்க்கால அடிப்படையில் அளிக்க வேண்டும்.50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கோவில்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறி உள்ளன.

திராவிடர் கழகத்தினரும் திமுகவினரும் பல இடங்களில் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துப் பள்ளிகள், கடைகள் கட்டியுள்ளனர். அதுபற்றிய விவரங்களை நான் வெளியிட உள்ளேன். என்றார்.

மேலும், தமிழகம் பெரியாழ்வார் மண் என்ற தமிழிசையின் கருத்து வரவேற்கத்தக்கது என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க